இந்திய தேசிய இயக்கம் (1917 - 1947)
1. குடியானவர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெண்கள் போன்ற சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் பங்கேற்ற முதலாவது மக்கள் இயக்கமாக இது திகழ்ந்தது.
2. இந்தியாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் தேசியம் பரவ இது வழிவகுத்தது.
3. கிலாபத் இயக்கமும் இதனுடன் ஒன்றிணைக்கப்பட்டதால், இந்து - முஸ்லிம் ஒற்றுமையின் உச்சகட்டமாக இது திகழ்ந்தது.
4. இந்திய மக்களுக்கு எத்தகைய துன்பத்தையும் தாங்கும் சக்தி உண்டு என்பதையும், எவ்வித தியாகத்திற்கும் அவர்கள் தயாராக உள்ளனர் என்பதையும் இது எடுத்துக் காட்டியது.
மோதிலால் நேரு |
ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து 1922 டிசம்பரில் நடைபெற்ற கயா காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரசில் பிளவு ஏற்பட்டது. மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் போன்ற தலைவர்கள் காங்கிரசுக்குள்ளேயே 1923 ஜனவரி 1 ஆம் நாள் சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தனர். சுயராஜ்ய கட்சியினர், சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு உள்ளிருந்துகொண்டே அரசாங்கத்தை நிலை குலையச் செய்ய முடிவு செய்தனர். 1923 நவம்பரில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. இதில் சுயராஜ்ய கட்சி குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றது. மத்திய சட்டமன்றத்தில் மோதிலால் நேரு கட்சித் தலைவராகவும் வங்காள சட்டமன்றத்தில் சி.ஆர். தாஸ் கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சட்டமன்றத்தில் சுயராஜ்ய கட்சி பல முக்கிய பணிகளை மேற்கொண்டது. 1919 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தில் பல மாறுதல்களைக் கொண்டு வந்து இந்தியாவில் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் நடைபெற இக்கட்சி பாடுபட்டது. அரசின் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக பல தீர்மானங்களைக் கொண்டு வந்தனர். உள்துறைக்கான உறுப்பினர் அலெக்சாந்தர் முட்டிமான் இரட்டையாட்சி முறையை போற்றிப் புகழ்ந்தபோது, மத்திய சட்டசபையில் அதற்கு எதிரான தீர்மானத்தை சுயராஜ்ய கட்சி கொண்டு வந்தது. 1925 ஜூனில் சி.ஆர். தாஸ் மறைந்தபிறகு சுயராஜ்ய கட்சி பலவீனமடைந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தேசிய இயக்கம் (1917 - 1947) , இந்திய, சுயராஜ்ய, வரலாறு, கட்சி, இயக்கம், நேரு, சட்டமன்றத்தில், கொண்டு, தாஸ், மோதிலால், தேசிய, இந்தியாவின், கட்சித், தலைவராகவும், மத்திய, சட்டமன்றத், திகழ்ந்தது, ஒத்துழையாமை, இந்தியா, என்பதையும்