இந்திய தேசிய இயக்கம் (1885 - 1905)
தேசிய இயக்கத்தின் தொடக்க காலமான இந்த கட்டத்தில் ஏ.ஒ.ஹியூம், டபிள்யூ.சி. பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, பெரோஸ் ஷா மேத்தா, கோபால கிருஷ்ண கோகலே, பண்டிட் மதன்மோகன் மாளவியா, பக்ருதீன் தியாப்ஜி, நீதிபதி ரானடே, ஜி. சுப்ரமணிய அய்யர் போன்றவர்கள் முக்கிய தலைவர்களாக இருந்து வழி நடத்திச் சென்றனர்.
சுரேந்திரநாத் பானர்ஜி இந்தியாவின் 'பர்க்' என்று அழைக்கப்பட்டார். வங்கப் பிரிவினையை அவர் கடுமையாக எதிர்த்தார். 1876ல் அரசியல் சீர்திருத்தங்கள் கோரி போராடுவதற்காக இந்தியக் கழகம் ஒன்றை தோற்றுவித்தார். அவர் நிறுவிய இந்திய தேசியப் பேரவை (1883) பின்னர் 1886ல் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைக்கப்பட்டது.
![]() |
கோகலே |
தாதாபாய் நௌரோஜி இந்தியாவின் முதுபெரும் மனிதர் என்று அழைக்கப்பட்டார். இந்தியாவிற்கான அதிகாரபூர்வமற்ற தூதராக இங்கிலாந்தில் இவர் கருதப்பட்டார். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் அவையில் உறுப்பினரான முதல் இந்தியர் இவரே ஆவார்.
கோபால கிருஷ்ண கோகலே காந்தியின் குருவாக கருதப்பட்டவர். 1908ல் அவர் இந்தியப் பணியாளர் கழகத்தை தோற்றுவித்தார். நாட்டிற்காக தொண்டு செய்ய இந்தியர்களுக்கு பயிற்சியளிப்பதே இக்கழகத்தின் நோக்கமாகும். முதல் சில ஆண்டுகள் காங்கிரஸ் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற்றுத் திகழ்ந்தது.
1885 முதல் 1905 வரை காங்கிரஸ் தலைவர்கள் மிதவாதிகளாக இருந்தனர். அவர்களது கோரிக்கைகள் மிதமாகவே இருந்தமையால், மிதவாதிகள் என்று அழைக்கப்பட்டனர். மேலும், தங்களது கோரிக்கைகளை வென்றெடுக்க அமைதியான, அரசியல் சட்ட நெறிமுறைகளின் வழிமுறைகளையே மிதவாதிகள் பின்பற்றினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தேசிய இயக்கம் (1885 - 1905) , இந்திய, வரலாறு, தேசிய, அவர், கோகலே, பானர்ஜி, இந்தியாவின், இயக்கம், அரசியல், மிதவாதிகள், தோற்றுவித்தார், காங்கிரஸ், பிரிட்டிஷ், அழைக்கப்பட்டார், கோபால, சுரேந்திரநாத், இந்தியா, தாதாபாய், நௌரோஜி, சுப்ரமணிய, கிருஷ்ண, அய்யர்