இந்திய தேசிய இயக்கம் (1885 - 1905)
ஆரம்பகால அரசியல் கழகங்கள்
1. பிரிட்டிஷ் இந்தியக் கழகம் - 1851 வங்காளம்
2. பம்பாய் கழகம் - 1852, தாதாபாய் நவ்ரோஜி
3. கிழக்கு இந்திய கழகம் - 1856, லண்டன்
4. சென்னை சுதேசி சங்கம் - 1852,
5. பூனா சர்வஜனச் சபை - 1870
6. சென்னை மகாஜன சங்கம் - 1884
ஆ. ஆ. ஹியூம் |
பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவர் ஒரு அகில இந்திய அமைப்பை தோற்றுவிக்க முயற்சிகள் எடுத்தார். அதன் விளைவாக, இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்டு அதன் முதல் கூட்டம் 1885ல் பம்பாயில் நடைபெற்றது. டபிள்யூ.சி. பானர்ஜி அதற்கு தலைமை வகித்தார். இந்தியா முழுவதிலுமிருந்து 72 பிரதிநிதிகள் அதில் கலந்து கொண்டனர். இவர்கள் பல்வேறு சமயப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமய, ஜாதி, மொழி மற்றும் பிராந்திய வேறுபாடுகள் இன்றி அனைத்து இந்தியர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
டபிள்யூ.சி. பானர்ஜி |
இந்திய தேசிய இயக்கத்தின் வரலாற்றை மூன்று முக்கிய நிலைகளாக அறிந்து கொள்ளலாம்.
1. மிதவாத தேசியம் (1885 - 1905) இக்காலத்தில் காங்கிரஸ் பிரிட்டிஷாருக்கு விசுவாசமாகவே செயல்பட்டது.
2. 1906 முதல் 1916 வரையிலான காலத்தில் சுதேசி இயக்கம், தீவிரவாத தேசியம், தன்னாட்சி இயக்கம் போன்றவை நடைபெற்றன.
3. 1917 முதல் 1947 வரையிலான காலத்தை காந்தி காலம் எனப்படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தேசிய இயக்கம் (1885 - 1905) , இந்திய, தேசிய, வரலாறு, இயக்கம், காங்கிரஸ், கழகம், கூட்டம், தேசியம், இந்தியா, அனைத்து, பானர்ஜி, செயல்பட்டது, வரையிலான, டபிள்யூ, நடைபெற்றன, சுதேசி, பிரிட்டிஷ், பல்வேறு, சென்னை, சங்கம், ஹியூம், நடைபெற்றது