நற்றிணை - 246. பாலை

இடூஉ ஊங்கண் இனிய படூஉம்; நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்; மனை மா நொச்சி மீமிசை மாச் சினை, வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்; உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி, |
5 |
செய்பொருட்கு அகன்றனராயினும் பொய்யலர், வருவர் வாழி- தோழி!- புறவின் பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ, இன் இசை வானம் இரங்கும்; அவர், 'வருதும்' என்ற பருவமோ இதுவே? |
10 |
தோழீ! வாழி! நாம் கருதியதன் இடையிட்டு உவ்விடத்தே இனிய நிமித்தம் உண்¢டாகாநின்றன; நெடிய சுவரின்கணுள்ள பல்லியும் நம்பக்கத்திருந்து நம்மைத் தௌ¤வியாநின்றது; மனையகத்துள்ள பெரிய நொச்சிவேலியிலுயர்ந்த மாமரத்தின் கிளையிலிருந்து இனிமை பயப்பக் கூவுந்தொழிலிலே கை போதலான் மாட்சிமைப்பட்ட கரிய குயில் கூவுதலையுஞ் செய்யாநிற்கும்; நந்தலைவர் வலிமைமிக்க உள்ளத்துடனே பலவாய சுரத்தைக் கடந்து ஈட்டப்படும் பொருட்காக அகன்றனராயினும்; தாம் குறித்த பருவத்திலே பொய்யாராய் வருவர்காண்!; கானத்துப் பொன் போலும் மலரையுடைய கொன்றையுடனே பிடாவும் மலராநிற்ப; இனிய குரலையுடைய மேகம் முழங்காநிற்குமாதலால்; அவர் வருவே மென்ற பருவம் இதுதான் போலும்;
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - காப்பியஞ் சேந்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 246. பாலை, இலக்கியங்கள், பாலை, இனிய, நற்றிணை, பொன், தோழி, வாழி, போலும், அவர், பல்லியும், எட்டுத்தொகை, சங்க, குயில், அகன்றனராயினும்