குறுந்தொகை - 262. பாலை - தோழி கூற்று
(தலைவி தலைவனுடன் போவதற்கு நேர்ந்த தோழி, அதனைத் தலைவிக்கு உணர்த்தியது.)
ஊஉ ரலரெழச் சேரி கல்லென ஆனா தலைக்கும் அறனி லன்னை தானே இருக்க தன்மனை யானே நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க உணலாய்ந் திசினா லவரொடு சேய்நாட்டு |
5 |
விண்தொட நிவந்த விலங்குமலைக் கவாஅற் கரும்புநடு பாத்தி யன்ன பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே. |
|
- பாலைபாடிய பெருங்கடுங்கோ. |
ஊரில் பழிமொழி உண்டாக தெருவில் உள்ளார் கல்லென்று ஆரவாரிப்ப அமையாமல் நம்மை வருத்துகின்ற அற நினைவில்லாத தாய் தன் வீட்டில் நின்னைப் பிரிந்து தான் ஒருத்தியே இருப்பாளாக; நான் நெடுந்தூரத்தில் உள்ள நாட்டின்கண் வானத்தைத் தொடும்படி உயர்ந்த குறுக்கிட்ட மலையின் அடிவாரத்தில் உள்ள கரும்பை நட்ட பாத்தியைப் போன்ற பெரிய ஆண் யானையினது அடிச்சுவட்டின் கண் தங்கிய நீரை அத் தலைவரோடு நெல்லிக் காயைத் தின்ற முள்ளைப் போலக் கூரிய பற்கள் விளங்கும் படி நீ உண்ணுதலை நினைந்தேன்.
முடிபு: எழ, கல்லென, அன்னை இருக்க; யான் உணல் ஆய்ந்திசின்.
கருத்து: நீ தலைவனுடன் போதலுக்கு யான் நேர்ந்தேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 262. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, பாலை, தின்ற, உள்ள, யான், இருக்க, தலைவனுடன், எட்டுத்தொகை, சங்க, கல்லென