குறுந்தொகை - 135. பாலை - தோழி கூற்று
(தலைவன் பிரியவெண்ணியிருப்பதை யறிந்து வேறுபட்ட தலைவியை நோக்கி, “ஆடவர் மகளிர்க்கு உயிரென்று கூறியவராகிய தலைவர் இப்பொழுது நின்னைப் பிரிந்து செல்லார்’ என்று தோழி கூறி ஆற்றுவித்தது.)
வினையே ஆடவர்க் குயிரே வாணுதல் மனையுறை மகளிர்க் காடவர் உயிரென நமக்குரைத் தோருந் தாமே அழாஅல் தோழி அழுங்குவர் செலவே. |
|
- பாலைபாடிய பெருங் கடுங்கோ. |
தோழி! தொழில் தான் ஆண்மக்களுக்கு உயிர் ஆகும்; ஒளிபொருந்திய நெற்றியையுடைய இல்லின் கண் உறையும் மகளிர்க்கு கணவன்மாரே உயிர் ஆவரென்று நமக்கு எடுத்துக் கூறியவரும் அத்தலைவரே; அழுதலையொழிவாயாக; அவர் செல்லுதலைத் தவிர்வர்.
முடிபு: தோழி, உரைத்தோரும் தாமே; அழாஅல்; செலவு அழுங்குவர்.
கருத்து: தலைவர் உன்னைப் பிரியாராதலின் நீ வருந்தற்க.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 135. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, பாலை, அழாஅல், அழுங்குவர், உயிர், தாமே, மகளிர்க்கு, எட்டுத்தொகை, சங்க, தலைவர்