அகநானூறு - 63. பாலை
கேளாய்; வாழியோ! மகளை! நின் தோழி, திரு நகர் வரைப்பகம் புலம்ப, அவனொடு பெரு மலை இறந்தது நோவேன்; நோவல் கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி, முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி |
5 |
பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்ப, கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல் சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண், அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி, கன்று காணாது, புன் கண்ண, செவி சாய்த்து, |
10 |
மன்று நிறை பைதல் கூர, பல உடன் கறவை தந்த கடுங் கால் மறவர் கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ முதுவாய்ப் பெண்டின் செது காற் குரம்பை மட மயில் அன்ன என் நடை மெலி பேதை |
15 |
தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள், 'வேட்டக் கள்வர் விசியுறு கடுங் கண் சேக் கோள் அறையும் தண்ணுமை கேட்குநள்கொல்?' எனக் கலுழும் என் நெஞ்சே. |
தலைமகள் புணர்ந்துடன் செல்ல, செவிலி தன் மகளுக்குச் சொல்லியது.- கருவூர்க் கண்ணம்புல்லனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 63. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, கடுங், புன், சங்க, எட்டுத்தொகை, தாள்