அகநானூறு - 344. முல்லை
வள மழை பொழிந்த வால் நிறக் களரி, உளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத் தொகு முகை விரிந்த முடக் காற் பிடவின், வை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர் கை மாண் தோணி கடுப்ப, பையென, |
5 |
மயிலினம் பயிலும் மரம் பயில் கானம் எல் இடை உறாஅ அளவை, வல்லே, கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க, நிழல் ஒளிப்பன்ன நிமிர் பரிப் புரவி வயக்கு உறு கொடிஞ்சி பொலிய, வள்பு ஆய்ந்து, |
10 |
இயக்குமதி வாழியோ, கையுடை வலவ! பயப்புறு படர் அட வருந்திய நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே! |
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 344. முல்லை , இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, வால், எட்டுத்தொகை, சங்க