அகநானூறு - 291. பாலை
வானம் பெயல் வளம் கரப்ப, கானம் உலறி இலை இலவாக, பல உடன் ஏறுடை ஆயத்து இனம் பசி தெறுப்ப, கயன் அற வறந்த கோடையொடு நயன் அறப் பெரு வரை நிவந்த மருங்கில், கொடு வரிப் |
5 |
புலியொடு பொருது சினம் சிறந்து, வலியோடு உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில், பரூஉப் பரல், சிறு பல் மின்மினி கடுப்ப, எவ்வாயும் நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை எருவை இருஞ் சிறை இரீஇய, விரி இணர்த் |
10 |
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப, பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர உவலை சூடிய தலையர், கவலை ஆர்த்து, உடன் அரும் பொருள் வவ்வலின், யாவதும் சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதர |
15 |
சிறியிலை நெல்லித் தீம் சுவைத் திரள் காய் உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று, புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி, அறு மருப்பு ஒழித்த தலைய, தோல் பொதி, மறு மருப்பு இளங் கோடு அதிரக் கூஉம் |
20 |
சுடர் தெற வருந்திய அருஞ் சுரம் இறந்து, ஆங்கு உள்ளினை வாழிய, நெஞ்சே! போது எனப் புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல், நல் எழில், மழைக் கண், நம் காதலி மெல் இறைப் பணைத்தோள் விளங்கும் மாண் கவினே. |
25 |
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லி யது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 291. பாலை , பாலை, இலக்கியங்கள், அகநானூறு, கடுப்ப, மருப்பு, மருங்கில், உடன், சங்க, எட்டுத்தொகை