பிறந்த எண் 7 - பிறந்த தேதிப் பலன்கள்
கேது (Dragon's Head)
பாற்கடலைக் கடையும்போது, திடீரென அதன் அச்சு சாய்ந்துவிட்டது! அதைச் சீர்ப்படுத்தவே தேவர்களின் பிராத்தனையின்படி திருமால் மச்ச அவதாரம் எடுத்து மேருமலையை நிமிர்த்திக் கொடுத்தார். தேவர்கள் மீண்டும் கடைவதற்கு உதவினார். பின்பு பாற்கடலில் இருந்த, முதன்முதலாகக் கொடிய விஷம் திரண்டு வந்தது! அதைப் பார்த்துப் பயந்து ஓடிய தேவர்கள், சிவபெருமானைச் சரணடைந்தனர். அவரும் அந்த ஆலகால நஞ்சைத்தானே எடுத்து அதை அருந்தினார். ஆனால் தனது கணவரின் உயிரைக் காப்பாற்ற எண்ணிய பார்வதி தேவி, சிவபெருமானின் கண்டத்திலேயே (தொண்டை ஸ்ரீ அந்த நஞ்சை நிறுத்தி விட்டார். அன்றிலிருந்து சிவபெருமானும் திருநீலகண்டர் என்று அழைக்கப்படுகிறார்) பாற்கடலிலிருந்து இதன்பிறகு காமதேனு, லட்சுமி போன்ற தேவர்களும் மேலும் அரிய பொருகளும் பாற்கடலிருந்து தோன்றின! இறுதியாகத் தன்வந்திரி பகவான் தன் கையில் அமிர்த கலசத்துடன் வெளிவந்தார். அதைத் தாங்களே பங்கு கொள்ள என்று தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் பிரச்சினை எழுந்தது! தேவர்கள் மீண்டும் மகாவிஷ்ணுவிடம் ஓடினார்கள். அமுதத்தை தங்களுக்குப் பெற்றுத் தரும்படி வேண்டினார்கள். எனவே விஷ்ணு பகவான் மோகினி அவதாரம் எடுக்க வேண்டியதாயிற்று. தன்னுடைய அழகால் அசுரர்களின் மதியினை மயக்கினார். தேவர்களை ஒரு வரிசையாகவும், அசுரர்களை எதிர் வரிசையாகவும் அமர்த்தி, முதலில் மிகவும் சாமர்த்தியமாகத் தேவர்களுக்கு அளித்தார். இந்தச் சூழ்ச்சியைத் தன்னுடைய ஞானதிருஷ்டியால் அறிந்து கொண்டு விஷ்வபாகு என்ற அசுரன் சாமர்த்தியமாகத் தேவர் உருவம் எடுத்துக் கொண்டு, சூரிய, சந்திரர்களிடையில் வந்து அமர்ந்து கொண்டார். பின்பு அமிர்தம் அவரது கைக்கு வந்தவுடனே, மிகவும் அவசர அவசரமாக உட்கொண்டார். சந்தேகமடைந்த சூரிய சந்திரர்கள் விஷ்வபாகு என்ற அந்த அரக்கனின் சூழ்ச்சியைத் திருமாலிடம் காட்டிக் கொடுத்தனர். இதையறிந்த திருமாலும் அரக்கன் மேல் மிகவும் கோபம் கொண்டு, அமிர்தம் ஊற்றயி சட்டு வந்தால் (கரண்டி), அசுரனின் உடலைத் துண்டித்துவிட்டார். அமுதம் உண்டதால் அந்த அரக்கன் சாகவில்லை! பாம்புவின் உடலைப் பெற்றுச் சிரஞ்சீவியானான். விஷ்வபாகு என்ற அந்த அரக்கனின் உடலானது பாம்புவின் தலையைப் பெற்றுக் கேது (Kethu) வானர், விஷ்வபாகுவின் தலையானது பாம்புவின் உடலைப் பெற்று இராகுவானது. நைசிர்க (இயற்கை) பலத்தில் இராகுவும், அதைவிடக் கேதுவும் பலம் பெற்றவர்கள். சூரியனைவிட இவர்கள் பலம் பெற்றவர்கள் (மற்ற ஆறு கிரகங்களைவிடப் பலம் வாய்ந்தவர் சூரியன்தான்) இந்த இராகு கேது பற்றிய புராணக்கதை வாசகர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக மிகவும் சுருக்கமாக இந்தக் கதையை கொடுத்துள்ளேன்.
சிவபெருமான், ஆலகால நஞ்சை உண்ட பின்பு தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஆனந்த தாண்டவம் ஆடினார். அம்பாளும் அவருடன் இணைந்து ஆடினார். இதையே பிரதோஷ கால நடனம் என்பார்கள். அந்த அரிய சிவபார்வதி நடனத்தைத் தேவர்கள் அனைவரும் கண்டு களித்தனர். தங்களது வேதனைகளையும், தோல்விகளையும், பாவங்களையும் தேவர்கள் போக்கிக் கொண்டனர். அந்தப் புண்ணியதினம்தான் பிரதோசம் என்று அழைக்கப்படுகிறது! திரயோதசி திதி வரும் தினத்தில் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ நேரம் மிகவும் புண்ணியமானது. எந்த ஒரு பாவத்தையும் நீக்கி வல்லது! பிரதோஷ காலவிரதமே அனைத்து விரங்களயும்விட, மிகவும் சக்தி வாய்ந்தது எனக் கருதப்படுகிறது!
இது புராண நூல் இல்லை என்றாலும், இராகு, கேதுகளின் பிறப்பைப் பற்றியும் வாசகர்கள் அறிந்து கொண்டால்தான் இராகு, கேதுக்களின் தன்மையைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். வெளிநாட்டினருக்கு, இந்தக் கதை தெரிந்ததால்தான் இராகுவை Dragons Tail என்றும், கேதுவை Dragons Head . என்றும் அழைத்தனர். இந்த எண் மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டது! மற்ற எண்களெல்லாம், மனிதனின் பிராத்தனைகளுக்கும், சக்திக்கும், வசியங்களுக்கும் கட்டுப்பட்டவை! ஆனால் இந்த 7 எண் மட்டும் இறைவனின் சர்வ வல்லமை மிகுத் எண்ணாக உள்ளது! இவர்களது பேச்சில் எப்போதும் பரம்பொருள், விதி, இறைவன் என்ற வார்தைகள் மிகுந்திருக்கும் 7ம் எண்ணானதும் இளமைக் காலத்தில் போராட்டங்களையும், வறுமையையும் (பெரும்பாலோர்க்கு)க் கொடுக்கும். ஆனால் நடு வயதிற்கு மேல் பெருத்த யோகங்களையும், பெரும் செல்வத்தையும் கொடுத்துவிடும். இவர்கள் தங்களின் கடுமையான உழைப்பில் வந்த பணத்தை, ஏழைகளின் நல்வாழ்க்கைக்காகவும், ஆலயத் திருப்பணிகளுக்காகவும், பொதுத் தொண்டிற்காகவும் அனாதை ஆசிரமத்திற்காகவும் செலவழிப்பார்கள்.
இவர்கள் உடையிலே எளிமையும், ஆனால் சுத்தமும் இருக்கும். தங்களது கடமையிலேயே மிகவும் கவனமாக இருப்பார்கள். இவர்களது செயல்களில் ஒரு கண்ணியம், கட்டுப்பாடும் இருக்கும். உலகத்தை உய்விக்க வந்த இயேசு கிறிஸ்து (Jesus Christ) ஆதிசங்கராச்சாரியார், ரவீந்திரநாத தாகூர் ஆகியோரெல்லாம் இந்த 7ம் எண்ணில் பிறந்தவர்களே! இவர்களுக்குச் சித்து விளையாட்டுக்கள் எல்லாம் எளிதில் கைகூடும்! இவர்கள் உலகப் பயணம் செய்து, தங்களது அனுபவங்களை உலகத்தாருக்கு அழகுடன் எடுத்துரைப்பார்கள். பொருளாதார நிலை 7ம் எண் அன்பர்களுக்குத் திருப்திகரமாக இருக்காது! வேதனைகளும், சோதனைகளும் இவர்களைத் தொடர்ந்து வரும். எந்த ஒரு செயல் தொடங்கினாலும் அதை நிறைவேறுவதற்காகப் பல தடைகளைச் சந்திக்க வேண்டி வரு. கேது பகவான் கொடுக்க ஆரம்பித்தால் அதை வேறு யாரும்(கிரகங்கள்) அழிக்கவோ, தடுக்கவோ முடியாது என்பது சோதிட உண்மையாகும். எப்படியும் நல்ல வளமான வாழ்க்கையைத் தங்களது வாழ்நாளில் அடைந்து விடுவார்கள். 7ம் எண்ணின் பலம் குறைந்த அன்பர்கள் பலர் உயர் கல்வி அமைந்திருந்தும், திறமைக்கேற்ற ஊதிம் கிடைப்பது மிகுந்த தடைப்படும். பெரும்பாலான 7-ம் எண்காரர்கள் இதனை நினைத்து வேதனையும், வாழ்க்கையில் விரக்தியும் அடைகின்றனர்.
பல இலட்சக்கணக்கான மூலதனத்தைப் போட்டும், செய்தொழிலில் முன்னேற்றத்தைக் காணாத நபர்களின் எண்கள் 7 ஆக இருப்பதைக் காணலம். அதே போன்று இந்த எண்காரர்கள் தொழில் திடீரென தாழ்ந்து மஞ்சள் கடிதம் (Insolvency Petition) கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கும் ஆளாகின்றார்கள்.
ஆனால் இந்த அன்பர்கள் சலிக்காமல் மனோ தைரியத்துடன் வாழ்க்கையில் போராடுவார்கள். 3ம் எண்காரர்கள், போன்று இவர்களும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுப்பார்கள். அண்ணன் சொத்து எடுத்துக் கொண்டாரா, பரவாயில்லை! மனைவி அவமதிக்கிறாளா& என் தலைவிதி! என்று இருப்பார்கள். உற்றாரும், ஊராரும் மதிப்பதில்லையே என்னை ஒருநாள் மக்களும், உறவினர்களும் பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கையும், எதையும் தாங்கிக் கொள்ளும் மனோபலமும் உண்டு! மனத்தில் கற்பனை வளரும். பிரபஞ்ச சக்தியுடன் உடனடித் தொடர்பும் இவர்களுக்கும்க் கிடைக்கும். தங்களது வாழ்க்கையில் கடினமாக உழைத்துத்தான் முன்னேற வேண்டுமே தவிர அடுத்தவர்கள், உறவினர்கள் உதவுவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது! ஒன்பது எண்களிலும் 9ம் எண்ணுக்கே முன்கோபம் உண்டு. அதை அடுத்து இந்த 7ம் எண்காரர்களுக்கும் முன்கோபம் அடிக்கடி வரும். இந்தக் குணத்தினாலேயே, இவர்களது நல்ல செயல்களும், குணங்களும் மக்களால் மறக்கப்படுகின்றன! பொதுவாகத் தங்கள் மனத்தில் உள்ளதை அப்படியே வெளியில் சொல்லிவிட மாட்டார்கள். இவர்கள் ஆத்மபலம் மிகுந்தவர்கள். அடுத்தவர்களின் தூண்டுதலை எதிர்பார்க்கமாட்டார்கள். இவர்கள் நீதிக்கும், தர்மத்திற்கும் போராடுவார்கள், மக்களுக்காக மனம் விரும்பி உழைப்பார்கள். அவர்களின் செய்நன்றியைப் பிரதிபலனாக எதிர்பார்க்க மாட்டார்கள் என்பதே இவர்களின் உயர்ந்த குணமாகும்.
உடல் அமைப்பு
இந்த எண்காரர்கள் பொதுவாக உயரமும், சற்று மெலிந்த உடலும் கொண்டிருப்பார்கள். உடல் உறுப்புகள் மிகவும் கச்சிதமாக அமைந்திருக்கும். மூக்கு சற்று நீண்டு வளைந்து காணப்படும். கை, கால் விரல்கள் திருத்தமாகவும் அழகுடனும் இருக்கும். சில அன்பர்களுக்குச் சிறு உடல் குறைவும் அமைந்து விடுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிறந்த எண் 7 - பிறந்த தேதிப் பலன்கள், மிகவும், தேவர்கள், இவர்கள், தங்களது, பிறந்த, அந்த, பலம், விஷ்வபாகு, இந்தக், எண்காரர்கள், கொண்டு, கேது, வரும், பகவான், பிரதோஷ, வாழ்க்கையில், இவர்களது, இராகு, ஜோதிடம், உடல், பாம்புவின், பலன்கள், அறிந்து, பற்றி, இருக்கும், பின்பு, சோதிட, தேதிப், dragons, ஆடினார், உடலைப், பெற்றவர்கள், மற்ற, என்றும், எந்த, அன்பர்கள், மனத்தில், உண்டு, முன்கோபம், மாட்டார்கள், சற்று, போராடுவார்கள், போன்று, இருப்பார்கள், வந்த, கொடுக்க, நல்ல, மேல், மனிதனின், தன்னுடைய, அசுரர்களின், காலத்தில், தேவர்களும், பாற்கடலைக், திடீரென, மேருமலையை, புராண, போல், ஜோதிடம், எண், head, எல்லாம், கேதுவைப், தேவர்களின், அவதாரம், சூழ்ச்சியைத், சாமர்த்தியமாகத், எடுத்துக், சூரிய, அரக்கனின், அமிர்தம், வரிசையாகவும், கொள்ள, மீண்டும், எடுத்து, ஆலகால, நஞ்சை, அரிய, அரக்கன்