பிறந்த எண் 4 - பிறந்த தேதிப் பலன்கள்

இராகு (Dragon's Tail)
இப்போது மக்கள் பிரதிநிதியான 4ஆம் எண்காரர்களின் சிறப்புப் பற்றிப் பார்ப்போம். உலகத்தில் உள்ள பலவகையான செய்திகளையும், அனுபவங்களையும் தெரிந்து கொள்வதில் இவர்கள் ஈடுபாடு கொண்டவர்கள்! எப்போதும் தன் இச்சைப்படி செயலாற்ற விரும்புவார்கள்.
எப்போதும் நான்கு பேருடன் கலகலப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். தனிமையை வெறுப்பார்கள். பணம் சம்பாதிக்கும்போது இருக்கும் பொறுமையை, பணம் செலவழிப்பதில் காட்டமாட்டார்கள். கையில் பணம் இருக்கும்வரை கண்ணில் பார்ப்பதை வாங்கும் இயல்பினர். நான்கு பேரை அதட்டி, தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். எதிலும் எதிர்ப்பு உள்ள விவகாரங்களையே எடுத்து வாதாடுவார்கள். நண்பர்களுக்காகச் செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். ஆனால் இவர்கள் மற்றவர்களின் உண்மையான அன்பிற்காக ஏங்குவார்கள். சமுதாயத்தின் முன்னேற்றம், நாட்டு நடப்புக்கள் ஆகியவற்றைப் பற்றிப் பொது இடங்களில் காரசாரமாகப் பேசுவார்கள்.
உணவு விஷயத்தில் தாராளமானவர்கள்! சுவையான உணவு, இனிமையான காட்சி ஆகியவற்றிற்காகப் பண விரயம் செய்வார்கள். தங்களின் உடல்நலம், ஆரோக்கியம் பற்றி மிகவும் கவலைப்பட்டு, அதற்காக லேகியங்களையும், மாத்திரைகளையும் சேர்த்துக் கொள்வார்கள்.
தங்களுடைய அபிப்பிராயங்களைத்தான் மற்றவர்ளும் ஏற்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். பிறர் அபிப்பிராயத்தை அலட்சியம் செய்வதில் மகிழ்ச்சி அடைவார்கள். தங்கள் காரியம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக, எநத வழியையும் பின்பற்றத் தயங்க மாட்டார்கள். இருப்பினும், வாழ்க்கையில் வெற்றி பெறுவோமா என்ற வீண் பயம் இருந்து கொண்டே இருக்கும். எதிலும் அவசரமும், ஆத்திரமும் உண்டு. தங்களைக் கண்டு பயப்படுபவர்களை, விரட்டிக் கொண்டே இருப்பார்கள். தங்களைக் கண்டு பயப்படாமல் இருப்பவரிடம் நயமாகப் பழகுவார்கள்.
சந்தேக குணமும், அதிகாரம் செய்யும் விருப்பமும் இருப்பதால், நண்பர்கள் குறைவாகவே இருப்பார்கள். தங்கள் முயற்சிகளில் அடுத்தவர் குறுக்கீட்டை விரும்பமாட்டார்கள். அவரிடம் வெறுப்பைக் காட்டுவார்கள். குடும்பத்திலும் இவர்களது குறுக்கீடுகள் அதிகம் இருக்கும். எனவே, குடும்பத்திலும் இன்பம் குறைவுதான்.
இளமைப் பருவத்தில் விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றில் மிகவும் ஈடுபாடு கொள்வார்கள். சோம்பல் குணம்தான் இவர்களது சத்துரு! அதை விட்டுவிட வேண்டியது அவசியம். முன்கோபம் ஓரளவு இருக்கும். சமயங்களில் அடுத்தவரைத் திட்டிவிட்டுப் பின்பு வருந்துவார்கள். சாதாரணமாக மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே, தங்கள் குரலை உயர்த்திப் பேசித் தங்களின் வாதங்களை வற்புறுத்துவார்கள். ஒரே விஷயத்தைப் பற்றியே, பட்டிமன்றமாகப் பேசுவார்கள். தங்களது சொந்தப் புகழுக்கும், பொருளுக்கும் ஆசைப்படமாட்டார்கள். ஆனால் அனைத்தும் தெரிந்த மனிதர் இவர்தான் என்று உலகத்தார் பேச வேண்டும் என நினைப்பார்கள். பொது நல சேவை செய்வார்கள். அரசியல்வாதிகளில் வெறிபிடித்த இலட்சியவாதிகள் என்று இவர்களில் சிலர் மாறி விடுவார்கள். இவர்களது வருமானம் உயர உயரச் செலவும் அதிகமாகிக் கொண்டே வரும். எனவே, செலவு செய்வதில் நிதானம் தேவை. இவர்கள் மக்களை நிர்வகிக்கும் வித்தையை அறிந்தவர்கள். இதனால் போலீஸ், மேலாளர் போன்ற தொழில்களில் சிறந்து விளங்குவார்கள்.
தொழில்கள்
ஒப்பந்த தொழில்கள், கார், லாரி, இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்கள், பேச்சாளர்கள், சோதிட நிபுணர்கள் ஆகியவை இவர்களுக்கு ஒத்து வரும். இவர்களில் பலருக்கு நல்ல ஆராய்ச்சி மனப்பான்மையும் உண்டு! துப்புத் துலக்கும் பணிகளிலும் விரும்பி ஈடுபடுவார்கள்.
நிருபர்கள், டைப்பிஸ்ட்டுகள், இரயில்வே, வங்கி ஊழியர்கள் போன்ற தொழில்களும் அமையும். அடுத்தவர்களைத் தூண்டி வேலை வாங்கும் மலாளர், மேற்பார்வையாளர் போன்றவையும், இவர்களுக்கு நன்மை தரும் தொழில்களாகும். கராத்தே, சர்க்கஸ், சிலம்பம் போன்ற உடற்பயிற்சித் தொழில்கள் ஏற்றவை. மேலும் இவர்களுக்கு மருத்துவம், சோதிடம் ஆகிய கலைகளிலும் ஈடுபாடு தீவிரமாக அமையும்.
விமர்சனங்கள் எழுதுவதில் இவர்களுக்குத் தனித்தன்மையும், புகழும் உண்டு. புத்தகங்கள் விற்பனை, வெளியிடுதல் போன்ற தொழில்களும் நன்மையே செய்யும். மாடு, குதிரை போன்ற கால்நடைத் தரகும், லாபம் தரும். கட்டில், பீரோ போன்றவை, சினிமாப் படங்கள் தயாரித்தல், விற்றல் ஆகியவையும் ஒத்துவரும்! மக்கள் தொடர்பு தொழில்கள் (றி.ஸி.ளி) இவர்களுக்கு மிகவும் ஒத்துவரும் தொழிலாகும். டெய்லர்கள், கார், பைக், ஸ்கூட்டர் மெக்கானிக்குகள், எலக்ட்ரிசியன்கள், அரசு அலுவலகங்களில் புரோக்கர்கள் வேலை போன்றவை இவர்களுக்கு அமையும்.
இவர்களும் மனோ வேகம் நிறைந்தவர்களே! உடப்பயிற்சி, சர்க்கஸ் போன்ற உடல் சம்பந்தமான தொழிலும் ஒத்து வரும். றிஸிளி தொழில்கள் , ஊர் சுற்றிச் செய்யப்படும் தொழில்கள், யந்திரங்கள் மூலம் பொருள்கள் உற்பத்தி செய்தல், மெக்கானிக், மரத் தொடர்பான கைத்தொழில்கள், கால்நடைகள், நாய் போன்ற நாற்கால் பிராணிகளில் வியாபாரம் நன்கு அமையும்.
பேச்சில் சமர்த்தர்கள். பெரிய பேச்சாளர்களாகவும், அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களாகவும் இருப்பார்கள். ... கட்டிடம் கட்டுதல், ஆட்களை விரட்டி வேலை வாங்குதல் தொழில்களும் இவர்களுக்கு ஒத்து வரும். .. மற்றும் அனைத்து வாகனங்கள் ஓட்டுதல் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். மக்களுக்கு தினமும் தேவைப்படும் தொழில்கள், இன்சினியரிங் தொழிலாளர்கள், பத்திரிக்கைத் தொழில், .. ஆகியவையும் ஒத்து வரும். ரெயில்வே, பஸ், விமான நிலையங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகள் அமையும்.
வீடு, வாகனம் புரோக்கர்கள், வக்கீல்கள், ஹாஸ்டல், ஹோட்டல் நிர்வாகிகளாகவும், மதுபானங்கள் விற்பனை, தாதா போன்ற வழியில் ஈடுபடுதல் (சிலர்) ஆகியவையும் அமையும்.
மீன், இறைச்சி வியாபாரம் மின்சாரம், இலக்கியம் தொடர்பான வேலைகள், மாந்தரீகத் தொழில்கள், ஆடு,மாடு, கோழி போன்றவற்றை அறுக்கும் தொழில், விஷ வைத்தியம் செய்தல், வித்தைகள் செய்து சம்பாதித்தல் போன்றவையும் அமையும். சிலர் சட்டத்திற்குப் புறம்பான தொழில்களிலும் ஈடுபடுவார்கள். எண்ணின் பலம் குறையும் போது மற்றவர்களை விரட்டிப் பிழைக்கவும், ஏமாற்றவும் தயங்கமாட்டார்கள்
இராகுவின் யந்திரம் (சக்கரம்)
13 | 8 | 15 |
14 | 12 | 10 |
9 | 16 | 11 |
இராகுவின் மந்திரம்
அர்த்காயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்தநம்! ஸிம்ஹிகா கர்ப்பஸம்பூதம் தம் ராஹூரும் ப்ரணாம்யஹம் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிறந்த எண் 4 - பிறந்த தேதிப் பலன்கள், தொழில்கள், அமையும், இவர்களுக்கு, பிறந்த, வரும், ஈடுபாடு, வேண்டும், இருக்கும், மிகவும், ஒத்து, தங்கள், பலன்கள், ஆகியவையும், உண்டு, இவர்களது, வேலை, கொள்வார்கள், சிலர், தொழில்களும், இருப்பார்கள், கொண்டே, ஜோதிடம், தேதிப், பணம், இவர்கள், எண், போன்றவையும், தரும், சர்க்கஸ், ஜோதிடம், தயங்க, மக்கள், சிறப்புப், ஈடுபடுவார்கள், விற்பனை, மாடு, தொடர்பான, வியாபாரம், தொழில், இராகுவின், செய்தல், புரோக்கர்கள், போன்றவை, செலவு, ஒத்துவரும், கார், பற்றிப், வற்புறுத்துவார்கள், செய்வதில், மாட்டார்கள், நான்கு, வாங்கும், தங்களின், பேசுவார்கள், உணவு, செய்வார்கள், தங்களைக், கண்டு, இவர்களில், எதிலும், உள்ள, ஆகியவற்றில், எப்போதும், விரும்புவார்கள், செய்யும், குடும்பத்திலும், பொது