பிறந்த எண் 4 - பிறந்த தேதிப் பலன்கள்

இராகு (Dragon's Tail)
ஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19 ஆகிய தினங்களும், கூட்டு எண் 1 வரும் தினங்களும் மிகவும் அதிர்ஷ்டமானவே. 28ந்தேதி நடுத்தரமான பலன்களையே கொடுக்கும். அதேபோன்று 9, 18, 27 ஆகிய தேதிக்கும். கூட்டு எண் 9 வரும் தினங்களும் நல்ல பலன்களையே கொடுக்கும்.
அதே போன்று 4, 13, 22, 31 ஆகிய தேதிகள் தாமாகவே நல்ல பலன்களைக் கொடுக்கும். ஆனால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் தோல்வியே மிஞ்சும். அதே போன்று 8, 17, 26 ஆகிய தேதிகளும் கூட்டு எண் 8 வரும் தினங்களும் துரதிருஷ்டமானவை. 7, 16, 25 ஆகிய தேதிகளும் துரதிருஷ்டமானவைதான்.
அதிர்ஷ்ட இரத்தினம், உலோகம்
கோமேதகம் அணிவது மிகவும் சிறப்பைத் தரும். இரத்தினக் கற்களில் மர நிறமுடைய கற்களை அணிய வேண்டும். நீலநிற கற்களும் அணியலாம்.
அதிர்ஷ்ட நிறங்கள்
நீலநிறம் மிகவும் சிறந்தது. நீலக்கோடுகள் குறைந்தபட்சம் இருக்கவேண்டும். மஞ்சள் நிறமும் அதிர்ஷ்டமானது. இலேசான பச்சை, நீலம் உடைகளும் நல்லதுதான். கருப்பு நிற ஆடைகளைத் தவிர்க்கவேண்டும்.
நண்பர்கள்
பொதுவாக 1, 2, 4, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் வைத்துக் கொள்ளலாம். 8ந் தேதி பிறந்தவர்களை நண்பர்களாக வைத்துக் கொள்ளலாமே தவிரப் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொள்ளக்கூடாது. 1ம் எண்காரர்கள் இவர்களைத் தங்கள் ஆளமைக்குள் கொண்டு வந்து, இவர்களையும் முன்னேறச் செய்வார்கள்.
திருமணம்
பெரும்பாலும் இளமையிலேயே இவர்களின் திருமணம் அமைந்துவிடும். மனைவியுடன் எப்போதும் விதண்டாவதம் செய்பவர்களானாலும் குடும்ப பாசத்திலும் அன்பிலும் சிறந்தவர்கள். தூய்மையே மிகவும் புனிதமாகப் போற்றுவார்கள். தாங்கள் காதலித்தவர்களை சமூகத்தின் கட்டுப்பாட்டையும், எதிர்ப்பையும் மீறி மணந்து கொள்ளும் வேகமும், தைரியமும் உண்டு!
இவர்கள் 1, 8 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால் (பிறவி எண் மற்றும் கூட்டு எண்) நல்ல திருமண வாழ்க்கை அமையும். 5 அல்லது 6 எண்களின் பிறந்த பெண்களும் இவர்களுக்கு நன்மையே செய்வார்கள். இருப்பினும் 4-ம் தேதிகளில் பிறந்த ஆண்கள், 6-ஆம் எண்ணில் பிறந்தவர்களுடன் திருமணம் செய்து கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும்.
திருமண தேதி
இவர்கள் தங்களுடைய திருமணத்தை 1 அல்லது 6 எண்ணாக வரும் தேதிகளில் (தேதி எண் அல்லது கூட்டு எண்) வைத்துக் கொண்டால், திருமண வாழ்வின் இன்பத்தை அடையலாம்.
முக்கியக் குறிப்பு
சர்வ வல்லமை படைத்த இராகுவானவர். எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் சரி, தன்னுடைய இஷ்டப்படியேதான் நடத்துவார். எனவே 4ந் தேதி பிறந்த அன்பர்கள் தங்களுடைய வாழ்க்கையில், எதிர்பாராத மாற்றங்களை சந்திக்க வேண்டியது வரும். அந்த மாற்றங்களை எல்லாம் நன்மைக்கே என்று மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு செயல்பட்டால், அதிர்ஷ்டங்கள் பின்பு தாமே வந்து சேரும்.
நோய்களின் விபரங்கள்
பொதுவாக இவர்கள் பித்த ஆதிக்கம் உடையவர்கள். மனநோய்களான டென்ஷன், படபடப்பு அதிகம் உடையவர்கள். இரத்தக் குறைவு நோயும் உண்டாகும். மனச்சோர்வுகள் அடிக்கடி ஏற்படும். இருப்பினும் இவர்களுக்கு வரும் நோய்கள் உடனுக்குடன் விலகிவிடும் யோகமும் உண்டு. வாய்வுப் பிடிப்பு, சீரண சக்தி, இடுப்பு வலி, பின் தலை வலி, சோகைகள் போன்றவைகள் ஏற்படும். தலை, கண், மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட கோளாறுகள் அடிக்கடி வந்து மறையும். மாமிச உணவுகள், மசாலப் பொருட்கள் போன்றவற்றை நீக்குவது நன்மை புரியும். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வந்தால், இவர்களை நோய்கள் அணுகாது!" அனுபவம் உள்ளவர்கள் அதிகம் பேசமாட்டார்கள்" என்பதை அவசியம் வாழ்வில் இவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். "நிறைகுடம் தளும்பாது" போன்ற பழமொழிகளைத் தங்களது வாழ்க்கையில் இவர்கள் கடைப்பிடித்தால் இவர்களும் நல்ல அதிர்ஷ்டத்தையும், இலாபங்களையும் அடையலாம். எதிர்ப்புக்களையும், எதிரிகளையும் தவிர்த்து விடலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிறந்த எண் 4 - பிறந்த தேதிப் பலன்கள், பிறந்த, ஆகிய, வரும், இவர்கள், கூட்டு, தேதிகளில், நல்ல, மிகவும், தேதி, தினங்களும், வந்து, பலன்கள், தேதிப், கொண்டால், அல்லது, திருமண, வைத்துக், திருமணம், அதிர்ஷ்ட, கொடுக்கும், ஜோதிடம், அடையலாம், வாழ்க்கையில், தங்களுடைய, செய்து, இருப்பினும், மாற்றங்களை, உடையவர்கள், நோய்கள், ஏற்படும், அடிக்கடி, அதிகம், இவர்களுக்கு, எண், செய்வார்கள், போன்று, கொண்டு, தேதிகளும், ஜோதிடம், மணந்து, பொதுவாக, பலன்களையே, பிறந்தவர்களை, உண்டு, வேண்டும்