பிறந்த எண் 3 - பிறந்த தேதிப் பலன்கள்

குரு (Jupiter)
இவர்களிடம் மற்ற அனைவரையும் விடத் தாங்கள்தான் அறிவிலும், அதிகாரத்திலும் உயர்ந்து விளங்க வேண்டும் என்ற எண்ணமும், அதற்கேற்ற உழைப்பும் உண்டு. பிறரைக் கட்டுப்படுத்தி, தனது ஆதிக்கத்தைச் செலத்த வேண்டும் என்கிற தீவிர எண்ணங்களும் உண்டு. எந்த ஒரு செயலிலும் கட்டுப்பாடும், ஒழுங்கும் இருக்க வேண்டும் என்பார்கள். தங்களுடைய மேலதிகாரிகள், முதலாளிகள் போன்றவர்களுக்கு மிகவும் விசுவாசமாகவும், உண்மையாகவும் இருப்பார்கள். மனச்சாட்சி பார்த்துச் செயல்படுவார்கள். எனவே, வியாபாரத்திலும் அல்லது உத்தியோகத்திலும் வெகுவிரைவில் முன்னேறி விடுவார்கள்.
இவர்களது கண்டிப்பான நடத்தையின் மூலம் சில எதிரிகளும் ஏற்பட்டு விடுவார்கள். கர்வம் ஓரளவு வந்து விடும். அடுத்தவரைப் புகழ்ந்து பேசத் தயங்குவார்கள். சுதந்திர எண்ணங்களும், அடுத்தவர்களை விட மேலே இருக்க வேண்டும் என்று தீவிர எண்ணமும் உண்டு. உலகம் பாராட்டும் ஆன்மீகத் தலைவராகவோ, ராஜதந்திரியாகவோ, தங்களை வருத்திக்கொண்டு தியாகங்கள் புரியும் தேசியத் தலைவர்களாகவோ விளங்குவார்கள் இவர்களே. சுவாமி விவேகானந்தர், இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்த பாபு இராஜேந்திர பிரசாத் போன்ற மகான்கள் எல்லாம் இந்த எண்ணில் பிறந்தவர்களே. நாணயம், பண்புடைமை, ஒழுக்கம் போன்ற நற்குணங்கள் நிறைந்தவர்கள். கடுமையான உழைப்பாளிகள். 3ன் பலம் குறைந்தால் இவர்களது உழைப்பினை எளிதான மற்றவர்கள் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் நல்ல பெயர் பெறுவார்கள். பல அன்பர்கள் ஆசிரியர்களாகவும் கல்லூரிப் பேராசிரியர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் மதப்பற்றும், தங்களது பண்பாடு, கலாசாரம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடும், நம்பிக்கையும் உடையவர்கள். புதிய நாகரிக முன்னேற்றங்களைக் குறை கூறுவார்கள். பிறருடைய நிர்ப்பந்தங்களுக்காக எந்த ஒரு ஒவ்வாத செயலையும் செய்ய மாட்டார்கள். இதனாலேயே பழமைவாதிகள் என்று முத்திரை குத்தப்படுவார்கள். இவர்களது பேச்சு உரையாடல்களில் இறைவன், விதி, நியாயம் போன்ற வார்த்தைகள் அதிகம் காணப்படும்.
குறுக்கு வழியில் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளத் தயங்குவார்கள். தங்களது விடாமுயற்சியும், சலியாத உழைப்பினாலும் எப்படியும் முன்னேறி விடுவார்கள். தங்களுடைய இயல்புக்கும், தகுதிக்கும் அப்பாற்பட்ட பதவியை அடைய விரும்ப மாட்டார்கள். அந்தஸ்து, கௌரவம் பார்ப்பதால், மற்றவர்களுக்குக் கடின மனத்தினர்கள் போல் தோன்றுவார்கள். இவர்களுக்குச் சமூகத்தில் நல்லவர், வல்லவர் என்ற பெயர் கிடைக்கும். அதனால் பண விஷயக்ளில் லாபத்தை எதிர்பார்க்க மாட்டார்கள். பொதுவாகப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிப்பில் 3ம் எண்காரர்கள் சிறந்து விளங்குவார்கள்.
3ம் எண்ணின் வலிமை குறைந்தால் தன்னம்பிக்கை குறையும். இதனால் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி, முன்னேற வகையறியாது பலர் முடங்கிக் கிடப்பார்கள். இந்த எண்களில் பிறந்த பல திறமைசாலிகள் வாழ்க்கையில் முன்னேறாததற்கு இதுதான் காரணம். கடன்கள், எதிரிகளால் பாதிப்பு எண்ணின் பலம் குறைந்தால் நிச்சயம் ஏற்படும். இந்த திறமைசாலிகளைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டு, தங்களின் திறமை என விளம்பரப்படுத்திக் கொண்டு, புகழ்பெறுவது சில தந்திரசாலிகளின் நடைமுறையாகும்.
எனவே, குருவின் (3), ஆதிக்க நிலை உணர்ந்து, எண்ணின் பலத்தை அதிகரித்துக் கொண்டால், பொருளாதாரத்தில் முன்னேற்றம், அரசாங்க ஆதரவு, தொழில் முன்னேற்றம் நிச்சயம் ஏற்படும். இவர்களுக்குப் பெரிய சிரமங்களும், துன்பங்களும் வராது. அப்படி வந்தாலும், வெகு நாட்கள் இருக்காது. வந்த சுகதுக்கங்கள் அனைத்தையும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்வார்கள். பல 3ம் தேதி அன்பர்கள் புகழ்மிக்க எழுத்தாளர்களாகவும், கலைஞர்களாகவும் விளங்குகிறார்கள்.
காதல் விவகாரங்கள் இவருக்கு வெற்றியைத் தருவது இல்லை. தங்களது கலாசாரத்தை விட்டு வெளியே வரத் தயங்குவார்கள். நல்ல மனைவி இயற்கையாகவே அமைந்து விடுவார்கள். 3, 9, 1 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை மணந்தால், நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். வீண் செலவுகள் அதிகமாகச் செய்வார்கள். ரேஸ், லாட்டரி போன்ற துறைகளில் அதிர்ஷ்டம் குறைவுதான்.
எண் 6க்குப் பகையாக இருப்பதால், 3ம் எண்காரர்கள் தங்களது பெயரில் (தனியாக) அசையாச் சொத்துக்கள் வாங்கக் கூடாது. அனுபவத்தில் பல பிரச்சினைகளைக் கொடுக்கும். தனது மனைவி பெயரிலோ அல்லது இருவரின் கூட்டுப் பெயரிலோ வாங்கலாம். மற்றவர்களை ஏமாற்றி, அதன் மூலம் வருமானம் பெற விரும்ப மாட்டார்கள். சட்டத் தொழில் செய்பவர்கள், நீதிபதிகள், வக்கீல்கள், ஆன்மீகத் தலைவர்கள் இந்த எண்காரர்களே, வங்கி, இன்சூரன்ஸ் போன்ற அரசு உத்தியோகங்களை அடையலாம். ஜோதிடம், ஆன்மீகம் மாந்தரிகம் போன்றவற்றில் ஈடுபாடு மிக உண்டு. பெரிய வியாபாரத்தை நடத்தினாலும் நியாயமான லாபத்தையே எதிர்பார்ப்பார்கள். இவர்களை நம்பிக் காரியங்களை ஒப்படைத்தால், தங்களை உயிரைக் கொடுத்தாவது அவற்றைச் செய்து முடித்து விடுவார்கள். நாணயஸ்தர்கள்.
தொழில்கள்
இவர்களுக்கு ஆசிரியர், சோதிடர்கள் போன்ற அறிவைத் தூண்டும் தொழில்கள் சிறப்பு தரும். நல்ல அரசு உத்தியோகங்கள் கிடைக்கும் யோகம் உண்டு. தர்ம ஸ்தாபனங்களில் உத்தியோகம் கிடைக்கும். பேச்சாளர்கள் இவர்கள் சிறந்த நுண்ணிய சாத்திர ஆராய்ச்சியார்கள், ஆலோசனையாளர்கள் போன்ற துறைகளிலும் பிரகாசிப்பார்கள். பல அன்பர்கள் புத்தக விற்பனையாளர்களாகவும், பள்ளிகள் நடத்துபவர்களாவும் இருப்பார்கள். அரசியல் ஈடுபாடும் ஏற்படும். (உ.ம். கலைஞர் கருணாநிதி) நன்கு பிரகாசிப்பார்கள். எழுத்தாளர்கள், பேப்பர் கடைகள், அச்சுத் தொழில் ஆகியவையும் இவர்களுக்கு நன்கு அமையும். கல்லூரிப் பேராசிரியர்கள், தத்துவப் பேராசிரியர்கள், மேலாளர்கள் போன்ற தொழில்களும் சிறப்புத் தரும். இராணுத்திலும் நன்கு பிரகாசிப்பார்கள்.
குருவுக்கே உரிய ஆலோசனைத் தொழில்கள் (Consultancy) ஆசிரியர், பேராசிரியர் போன்ற தொழில்கள் மிகப் பொருத்தமான தொழில்கள்! நிர்வாக சக்தி மிகுந்தவர்களாக இருப்பதால் அரசியல், நிர்வாகம், வங்கி போன்ற தொழில்களில் பிரகாசிப்பார்கள். பல மொழிகளின் மீது நாட்டம் கொள்வார்கள். அறிவுத் தாகம் கொண்டு எதையாவது படித்துக் கொண்டே இருப்பார்கள். வயது இவர்களுக்குத் தடையில்லை. மேலும் நீதித்துறையிலும், வழக்கறிஞர், கோவில் அறப்பணிகள் போன்றவையும் இவர்களுக்குள்ள தொழில்கள். ஆன்மீகப் பேச்சாளர்கள், சோதிடர்கள், புத்தகம் வெளியிடுதல், எழுதல், பொது கௌரவப் பணிகள் போன்றவையும் இவர்களுக்கு ஒத்த தொழில்கள்.
அரசியல் துறையிலும் மிக உயர்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். MLA, MP போன்ற பதவிகளும், அமைச்சர் பதவிகளும் தேடி வரு. அரசாங்க நிறுவனங்கள், இராணுவம் போன்றவற்றிலும் தலைமைப் பொறுப்புகளை ஏற்று நன்முறையில் செய்வார்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை செய்வதிலும், காரியங்களை திறம்பட ஏற்று நடத்துதலிலும் வல்லவர்கள். ஆனால் எதுவும் முறைப்படி நடக்க வேண்டும் என எதிர்ப்பார்கள். மிகச் சிறந்த குமாஸ்தாக்கள், கணக்காளர்கள் இவர்களே.
குருவின் யந்திரம் (சக்கரம்)
10 | 5 | 12 |
11 | 9 | 7 |
6 | 13 | 8 |
குருவின் மந்திரம்
தேவா நாஞ்ச ரி(ரீ)ணாஞ்ச குரும் காஞ்சந ஸ்ந்(நி)பம் புத்திதம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிறந்த எண் 3 - பிறந்த தேதிப் பலன்கள், தொழில்கள், பிறந்த, நல்ல, வேண்டும், விடுவார்கள், உண்டு, ஜோதிடம், பிரகாசிப்பார்கள், இருப்பார்கள், கிடைக்கும், கொண்டு, தங்களது, ஏற்படும், மாட்டார்கள், குருவின், இவர்களுக்கு, தயங்குவார்கள், குறைந்தால், அன்பர்கள், தொழில், எண்ணின், இவர்களது, பலன்கள், அரசியல், தேதிப், நன்கு, போன்றவையும், பேராசிரியர்கள், மனைவி, பதவிகளும், முன்னேற்றம், அரசாங்க, ஏற்று, அமையும், பெரிய, செய்வார்கள், காரியங்களை, பேச்சாளர்கள், தரும், சோதிடர்கள், அரசு, வங்கி, இருப்பதால், சிறந்த, பெயரிலோ, ஆசிரியர், இவர்கள், இருக்க, எந்த, தங்களுடைய, அல்லது, முன்னேறி, எண்ணங்களும், தீவிர, ஜோதிடம், எண், மற்ற, எண்ணமும், தனது, மூலம், ஆன்மீகத், போன்றவற்றில், கல்லூரிப், ஈடுபாடும், விரும்ப, எண்காரர்கள், பெயர், பயன்படுத்திக், தங்களை, விளங்குவார்கள், இவர்களே, பலம், நிச்சயம்