பிறந்த எண் 3 - பிறந்த தேதிப் பலன்கள்

குரு (Jupiter)
ஒவ்வொரு மாதத்திலும் 3, 9, 12, 18, 21, 27, 30 தேதிகள் மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதேபோன்று கூட்டு எண் 3 அல்லது 9 வரும் எண்களும் பலன்களைத் தரும்.
ஒவ்வொரு மாதத்திலும் 6, 8, 15, 17, 24, 26 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 6 அல்லது 8 வரும் தேதிகளிலும் புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிட வேண்டும்
அதிர்ஷ்ட இரத்தினம், உலோகம்
தங்கம் சிறந்த உலோகமாகும். பொன்நிற உடைகள் அதிர்ஷ்டத்தைத் தரும். செவ்வந்திக் கல் எனப்படும் கற்கள் மிகவும் யோகமானவை. புஷ்பராகம் கற்களும் நல்ல பலன்களைத் தரும். கனகபுஷ்பராகம் கல்லும் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்
தாமரைப் பூ நிறமே சிறந்தது. கத்திரிப்பு நிறம் மற்றும் நீலம் கலந்த வண்ணங்ககள் சிறப்புத் தரும். மஞ்சள் நிறமும் நன்மை அளிக்கக்கூடியதே. கருநீலம், கருப்பு, பச்சை நிறங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
நண்பர்கள்
இவர்களுக்கு 3, 12, 21, 30, 9, 18, 27 ஆகிய நாட்களில் பிறந்தவர்களும், கூட்டு எண் 3 மற்றும் 9 என வரும் அன்பவர்களும் மிகவும் உதவுவார்கள். மேற்கண்ட எண்களில் பிறந்தவர்களைக் கூட்டாளிகளாகவும், நண்பர்களாகவும் வைத்துக் கொள்ளலாம். 2ம் எண்களாலும் நன்மை ஏற்படும்.
1 எண்காரர்களின் மூலம் சில நன்மைகள் ஏற்பட்டாலும் அவை நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. 6, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களிடமும் கூட்டு எண் 6, 8 வரும் அன்பர்களிடமும் கவனமாக இருக்க வேண்டும். 3ம் தேதிக்காரர்களை இவர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
திருமணம்
இவர்கள் 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து (பிறந்த எண் அல்லது விதி எண்) கொண்டால், வாழ்க்கைப் பயணம், இனிமையாக இருக்கும். 2 எண்காரர்களையும் மணந்து கொள்ளலாம். இவர்களை அனுசரித்துப் போவார்கள்.
நோய்களின் விபரங்கள்
இவர்களுக்குத் தோல் வியாதிகள்தான் முதல் எதிரி. பெரும்பாலோருக்கு வயிற்று வலியும், மலச்சிக்கலும், வாய்வுக் கோளாறுகளும் உண்டு. வாய்ப்புண், குடல் சம்பந்தமான நோய்களும் ஏற்படும். மூச்சுப் பிடிப்பு, சொறி சிரங்கு போன்றவைகளாலும் அடிக்கடி தொந்தரவுகள் உண்டு.
நெல்லிக்கனியும், எலுமிச்சை மற்றும் கீரை வகைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை உடலுக்கு உறுதியையும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிறந்த எண் 3 - பிறந்த தேதிப் பலன்கள், பிறந்த, தரும், ஆகிய, வேண்டும், கூட்டு, வரும், ஜோதிடம், அல்லது, அதிர்ஷ்ட, தேதிப், கொடுக்கும், பலன்கள், மிகவும், ஏற்படும், கொள்ளலாம், எண்களில், இவர்கள், திருமணம், அடிக்கடி, உண்டு, கொள்ள, நல்ல, எண், பலன்களைத், ஜோதிடம், மாதத்திலும், தேதிகளிலும், அதிர்ஷ்டத்தைக், ஒவ்வொரு, நன்மை