பிறந்த எண் 2 - பிறந்த தேதிப் பலன்கள்
சந்திரன் (Moon)
ஒவ்வொரு மாதத்திலும் 7, 16, 25 ஆகிய தேதிகளும், எண் 7 வரும் தினங்களும் மிகவும் அதிர்ஷ்டமானவை. 2, 11, 20, 29 தேதிகளிலும் நடுத்தரமான நன்மையே நடக்கும். 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் சாதமான பலன்கள் நடைபெறும். 8 மற்றும் 9 எண்கள் இவர்களுக்கு கெடுதல் செய்பவையே. ஒவ்வொரு மாதத்திலும் 8, 9, 18, 26, 17, 27 ஆகிய தேதிகள் துரதிர்ஷ்டமானவை. புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட இரத்தினம், உலோகம்
வெள்ளி நன்மை தரும். வெள்ளியுடன் தங்கத்தையும் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன்களை அடையலாம். முத்து, சந்திர காந்தக்கல், வைடூர்யம் ஆகியவை அணிந்தால் அதிர்ஷ்ட பலன்களை அடையலாம். பச்சை இரத்தினக்கல், ஜேட் என்னும் கற்களையும் அணியலாம். நல்ல பலன்களைக் கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்
1. பச்சை கலந்த வர்ணங்களும், லேசான பச்சை, மஞ்சள், வெண்மை நிறங்களும் அதிர்ஷ்டகரமானவை.
2. கருப்பு, சிவப்பு, ஆழ்ந்த நீலம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
நண்பர்கள்
இவர்களுக்கு 7, 5, 6, 1 ஆகிய நாட்களில் பிறந்தவர்கள் நண்பர்களாக அமைவார்கள். இவர்கள் 1, 2, 4, 7 ஆகிய எண்களில் பிறந்த அன்பர்களை தொழிலில் கூட்டாளியாக ஏற்றுக் கொள்ளலாம். 5ம், 6ம் நடுத்தரமானதுதான் 9 எண்காரர்களையும், 8ம் எண்காரர்களையும் கூட்டாளிகளாகச் சேர்க்க வேண்டாம்.
திருமணம்
திருமண வாழ்வில் அதிர்ஷ்டம் இருந்தாலும், தங்களுக்கு அதிர்ஷ்ட எண்களில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால்தான் இவர்களது வாழக்கை வளமாக இருக்கும். இல்லையெனில் குடும்பப் பிரச்சினைகள் கடைசிவரை இருந்துகொண்டே இருக்கும். இவர்களின் திருமணத்திற்கு 1, 3, 5, 6 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் ஏற்றவர்கள். இருப்பினும் 7ந் தேதி பிறந்த பெண்ணே (பிறவி எண் (அ) கூட்டு எண்) மிகவும் சிறந்தவள். ஆனால் 8 அல்லது 9 எண் உடைய பெண்களை மட்டும் மணக்கவே கூடாது. பின்பு வாழ்க்கையே நரகமாகிவிடும். 1ம் எண் பிறந்த பெண்ணும், இவர்களை அடக்கி ஆட்கொள்வாள். நல்ல வழித்துணையாக அமைவாள். எனவே மணம் புரிந்து கொள்ளலாம்.
திருமண தேதி
இவர்கள் தங்களது திருமணங்களை 1, 10, 19, 28, 6, 15, 24, 7, 16 மற்றும் 25 தேதிகளும், மற்றும் 1, 6, 7 எண் கூட்டு எண்களாக வரும் தினங்களிலும் செய்து கொள்ள வேண்டும்.
குடும்ப வாழ்க்கை
இந்த எண்காரர்களுக்குக் குடும்ப வாழ்க்கை சிறப்பாகச் செல்லப்படவில்லை. சிறிய பிரச்சினைகளையும் கூடப் பெரிதுபடுத்திக் கொண்டு, மனைவிடம் சண்டை போடுவார்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். குழந்தைகளாலும் நிம்மதி குறைவு. எனவே, தங்களுக்கு வரும் மனைவியின் பிறந்த எண்களை முன்பே நன்முறையில் தேர்வு செய்து கொண்டு, திருமணம் செய்து கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால், இவர்களும் ஆனந்தமான வாழ்க்கை வாழலாம். இவர்கள் தங்களது குடுத்பத்தில் உள்ள மனைவி, குழந்தைகளை நம்ப வேண்டும். அவர்களுடன் ஒத்துழைத்து, அவர்களிடம் அன்பு காட்டினால், பின்னர் அவர்களால் நல்ல இன்பமான வாழக்கை அடையலாம். எந்த நிலையிலும், குடும்ப நிர்வாகத்தைத் தங்களிடமே வைத்துக் கொள்ளலாமல், மனைவி அல்லது தாயாரிடம் ஒப்படைத்துவிட்டால், பாதிக் குழப்பங்கள் வராமல் தடுத்துவிடலாம்.
நோய்களின் விபரங்கள்
அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுபவர்களாதலால், வயிற்றுக் கோளாறுகள் அடிக்கடி ஏற்படும். சந்திரனின் ஆதிக்கம் குறையும்போது சிறுநீரகக் கோளாறுகள், மனச்சோர்வு, மூலவியாதிகள் தோன்றும் இவர்களுக்கு நீர்த் தாகம் அதிகம் உண்டு. தண்ணீர், காபி, டீ மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை மிகவும் விரும்புவார்கள். எனவே, இவர்கள் குடிப் பழக்கத்திற்கு மட்டும் ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு அடிமையாகி விடுவார்கள். பூசணி, பறங்கி, வெள்ளைப்பூசணி, முட்டைக்கோசு ஆகியவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சளித் தொந்தரவுகளும் அடிக்கடி ஏற்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிறந்த எண் 2 - பிறந்த தேதிப் பலன்கள், பிறந்த, வேண்டும், ஆகிய, அதிர்ஷ்ட, நல்ல, கொள்ள, பலன்கள், இவர்கள், குடும்ப, அடையலாம், எண்களில், பச்சை, வாழ்க்கை, மிகவும், ஜோதிடம், இவர்களுக்கு, செய்து, தேதிப், வரும், அல்லது, கூட்டு, தங்களது, மட்டும், கொண்டு, அதிகம், ஆகியவற்றை, ஏற்படும், அடிக்கடி, மனைவி, கோளாறுகள், தேதி, கொள்ளலாம், தேதிகளும், தவிர்க்க, மாதத்திலும், ஒவ்வொரு, எண், ஜோதிடம், சேர்த்துக், பலன்களை, பெண்களை, வாழக்கை, தங்களுக்கு, திருமண, எண்காரர்களையும், திருமணம், இருக்கும்