பிறந்த எண் 1 - பிறந்த தேதிப் பலன்கள்

>சூரியன் (Sun)
எண் 1 ல் பிறந்தவர்கள் (விதி எண் 1 எண்காரர்கள் கூட) இந்த எண்களின் சக்தியானது தொழில் வகையிலும், அரசியல் வகையிலும், சமூக வகையிலும் நல்ல பலன்களைக் கொடுத்தாலும், இவர்களது குடும்பத்தில், மனைவி அமைவதில் மட்டும் சில குறைபாடுகளைக் கொடுத்து விடுகிறது. இந்த எண்ணில் பிறந்த (அல்லது) பெயர் அமைந்த சிலருக்கு மட்டுமே மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கை கிடைக்கிறது. ஆனால் பெரும்பாலோருக்கு இல்வாழ்க்கை என்பது தாமரை இலைத் தண்ணீரைப் போன்ற நிலையில்தான் அமைகின்றது. அன்பான மனைவி அமைந்தால் கூடத் தம்பதிகளுக்குள் பிரிவுகள் அடிக்கடி வந்து இவர்களை வாட்டுகிறது. இது தொழில் சம்பந்தமான பிரிவுகள் போன்ற தவிர்க்க முடியாதவைகளாகவே இருந்துவிடும். காதல் விஷயத்தில் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். எனவே இந்த அன்பர்கள் திருமணத்தை மட்டும் தங்களுக்கு அனுகூலமான தேதிகளில் பிறந்தவர்களுடன் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இவர்களுக்கு நிச்சயம் இல்லற இன்பம் அனுபவிக்கலாம். இந்த எண்ணில் பிறந்தவர்கள் (பிறவி எண், விதி எண்) எந்த ஒரு செயலையும் 4, 8 வரும் தேதிகளில் (தேதி எண் அல்லது கூட்டு எண்) செய்யக்கூடாது. திருமணம், சடங்ககுள், புதுமனை புகுதல், புதுக்கணக்கு, இடம் மாறுதல், புதிய உத்தியோகம், அல்லது உயர் பதவி ஏற்றல் கூடாது. மேலும் புதியதாகக் கடை ஆரம்பித்தல், கடன் கேட்கச் செல்லுதல்(?) பெரிய மனிதர்களை பார்க்க செல்லுதல், புதுப்பயிர் செய்தல், புதுக்கிணறு தோண்டுதல் ஆகியவை செய்யக்கூடாது.
தொழில்கள்
இவர்கள் பொதுவாக நிர்வாக சக்தி நிரம்பியவர்கள். எப்போதும் அதிகாரமுள்ள பதவிகளை வகிப்பதற்கு ஏற்றவர்கள். தங்களுக்கு கீழே உள்ளவர்களை ஏவி, வேலை வாங்கும் சக்தி நிறைந்தவர்கள். உழைப்பில் பின் வாங்காதவர்கள். எதையும் அதற்குரிய சட்டப்படி செயல்படவே விரும்புவார்கள். அரசாங்க அலுவலகஙகள், தர்ம ஸ்தாபனங்கள், கூட்டுறவுக் கழகங்கள், பொது நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் நிர்வாகியாக அமைவார்கள். எண்ணின் பலம் குறைந்தவர்கள் நம்பிக்கையான குமாஸ்தாவாக இருப்பார்கள். தனியாக நிறுவனங்களை நடத்தும் திறமை மிக்கவர்கள். ஆனால், வளைந்து கொடுக்கவோ, அனுசரித்துப் போகவோ தெரியாதவர்கள். இலாப நோக்கை விட, மனித நேயமும், தொழில் நியாயமும் இவர்களது நோக்கமாக இருக்கும். போட்டிகளில் விட்டுக் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். இவர்களுக்கென ஒரு வசிய சக்தி உண்டு. இதுவே இவர்களை சிறந்த நிர்வாகியாகவும், முதலாளியாகவும் காட்டிவிடும். தொழிலில் ஏற்படும் சங்கடங்கள், போட்டிகளால் அடிக்கடி மனச்சோர்வு அடைந்தாலும், உடனே சமாளித்து விடுவார்கள். அரசாங்க காண்ட்ராக்டர்கள், புகழ்பெற்ற மருத்துவர்கள், நிணிவிஷி வியாபாரிகள் போன்ற தொழில்களும் ஒத்து வரும். விஞ்ஞானத் துறை, பொறியியல் துறை, இரசாயனத் துறை, நீதித் துறை போன்றவையும் இவர்களுக்கு ஒத்து வரும். வெங்காயம், புகையிலை, கொள்ளு, உளுந்து, கோதுமை, பழவகைகள், காய்கறி வகைகள், ஆபரணங்கள், செயற்கை நூலிழைகள், மூலிகைகள் சம்பந்தப்பட்ட வியாபாரங்கள், பிராணிகள் பராமரிப்பு, தங்கம் சம்பந்தப்பட்ட தொழில்களும் இவர்க-ளுக்கு ஏற்ற தொழில்கள். இவர்கள் தங்களது வியாபார யுக்திகளையும், விளம்பர யுக்திகளையும் காலத்திற்கேற்றபடி மாற்றிக்கொண்டு செயல்பட்டால், தங்களது தொழிலில் பெரும் வெற்றிகளைக் குவிக்கலாம்.
சூரியனின் யந்திரம் (சக்கரம்)
6 | 1 | 8 |
7 | 5 | 3 |
2 | 9 | 4 |
சூரியனின் மந்திரம்
ஜபா குஸீம சங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம் தமோரிம் ஸர்வ பாபக்னம் பரணதோஸ்மி திவாகரம் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிறந்த எண் 1 - பிறந்த தேதிப் பலன்கள், பிறந்த, பலன்கள், துறை, அல்லது, வகையிலும், சக்தி, தொழில், வரும், இவர்கள், தேதிப், ஜோதிடம், அரசாங்க, நிறுவனங்கள், எண், செல்லுதல், தொழில்கள், தொழிலில், தொழில்களும், யுக்திகளையும், சூரியனின், தங்களது, சம்பந்தப்பட்ட, ஒத்து, செய்யக்கூடாது, ஜோதிடம், எண்ணில், பிறந்தவர்கள், மட்டும், மனைவி, இவர்களது, பிரிவுகள், அடிக்கடி, தேதிகளில், இவர்களுக்கு, தங்களுக்கு, வேண்டும், இவர்களை, விதி