6-ம் தேதி பிறந்தவர்கள்

எப்போதும் செல்வத்தில் திளைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காகக் கடுமையாக உழைப்பார்கள். எவரையும் சரிக்கட்டி, தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள். பெண் தன்மையும் காணப்படும். எதிலும் மிகுந்த ஊக்கத்துடன் ஈடுபடுவார்கள். அடக்க சுபாவமும், ஆழ்ந்த சிந்தனைகளும் உண்டு. கலைகளில் (64 கலைகளில் ஏதாவது ஒன்று அல்லது சில) மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள். இவர்கள் சாந்தமானவர்கள்தாம். கோபம் வந்தால் விசுவரூபமாகிவிடும். சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்தவர்கள். சுகம் நிறைய அனுபவிப்பார்கள்.