30-ம் தேதி பிறந்தவர்கள்
மிகுந்த திறமைசாலிகள், பணத்தைவிடச் சுயதிருப்தியை பிரதானமாக நினைப்பார்கள். எதையும் துருவித் துருவி ஆராயும் குணம் உண்டு. உயிராபத்து வந்தால் கூட பயப்படாமல் சாதனை செய்ய விரும்புபவர்கள். பொருளாதாரத்தில் திருப்திகரமான நிலை இருக்காது. ஊதாரித்தனமாக பணத்தைச் செலவழித்துப் பின்பு வருந்துவார்கள். ஒற்றர்கள், தூதர்கள், துப்பறிவாளர்கள் போன்றவர்கள் இந்த எண்காரர்களே. கௌரவம் எப்போதும் கிடைக்கும். தனிமையிலே சிந்திப்பதில் நாட்டம் உள்ளவர்கள். அரசியல் தொடர்பும் ஏற்படும். பலருக்கும் வழுக்கையும், நரையும் விரைவில் ஏற்படும். படிப்பறிவைக் கொடுக்கும் எண் இது.