3-ம் தேதி பிறந்தவர்கள்
சிறந்த சிந்தனையாளர்கள். தங்களுடைய ஆற்றலை ஆக்கரீதியாகப் பயன்படுத்திவெற்றி காண்பார்கள். பொறியியல், கணிதம், விஞ்ஞானம் போன்ற ஏதாவது ஒரு துறையில் வல்லுநர்களாக வருவார்கள். சிறந்த எழுத்தாளராகவும் இருப்பார்கள். கதை, கவிதை போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். 21 வயதிற்கு மேல்தான் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.