27-ம் தேதி பிறந்தவர்கள்

அறிவும், ஆற்றலும் நிறைந்தவர்கள். பலர் இராஜ தந்திரிகளாகவும் விளங்குவார்கள். சமூகத்தில் இவர்களுக்கு நல்ல செல்வாக்கு நிச்சியம் கிடைக்கும். இரவு நேரத்தில் வேலை செய்வது இவர்களுக்கு பிடிக்கும். இவர்களது திட்டங்கள் எல்லாம் நிச்சயம் வெற்றி அடையும். மனம் தளராமல் உழைப்பவர்கள். மற்ற இரு தேதிகளில் பிறந்த அன்பர்களை விட அமைதியானவர்கள். செயலில் நம்பிக்கை உடையவர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். நல்ல செயல்களின் மூலம் பேரும், புகழும் அடைவார்கள். சுதந்திர மனப்பான்மை உண்டு. நிதானமாக, அவசரப் படாமல் (சீரான திட்டத்துடன்) செயல்பட்டு வெற்றியைச் சீக்கிரம் அடைவார்கள். ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசித்தே காரியங்களில் ஈடுபடுவார்கள்.