24-ம் தேதி பிறந்தவர்கள்
அரசாங்க ஆதரவு இவர்களுக்குக் கிடைக்கும். அடக்கமும், அமைதியும் ஆனால் அழுத்தமும் நிறைந்தவர்கள். பெரிய இடத்துச் சம்பந்தமும், பெரும் பதவிகளும் தேடி வரும். மிகவும் துணிச்சல்காரர்கள். மற்றவர்கள் தயங்கும் காரியங்களை இவர்கள் ஏற்றுக் கொண்டு, திறமையுடன் செய்து முடிப்பார்கள். எனவே, விரைவிலேயே கிடைத்துவிடும். சிலர் விளையாட்டில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். தமக்கென ஒரு கொள்கையை ஏற்படுத்திக் கொண்டு அதில் துணிந்து செல்வார்கள். கலையுலகிலும் அதிர்ஷ்டம் உண்டு. சிலருக்குக் கர்வமும் ஏற்படும். தங்கள் கருத்துகளை அடுத்தவர் மீது திணிப்பார்கள். பொதுவாக வாழ்க்கையில் அதிர்ஷ்டசாலிகள் என்றே கூற வேண்டும்.