21-ம் தேதி பிறந்தவர்கள்
எப்போதும் தங்களின் நலன் பற்றியே சிந்திப்பவர்கள். தங்களுக்குப் பிரயோசனமாக இருக்கும் தொழில்களிலேயே நாட்டம் செலுத்துவார்கள். வாழ்க்கையின் முன் பகுதியில் பல ஏற்றத் தாழ்வுகள் மூலம் நல்ல அனுபவங்களைப் பெறுவார்கள். பலமுறை தோல்விகளைச் சந்தித்தாலும் சலிக்காமல் உழைப்பார்கள். நடுவயதில் இவர்கள் பல வாழ்க்கைப் பிரச்சினைகளை சந்திப்பார்கள். உலகத்தில் புதிதாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்துச் செயல்படுவார்கள். அதன் மூலம் பெரும் புகழும், செல்வமும் அடைவார்கள். எழுத்தும், பத்திரிகைத் தொழிலும் நன்கு அமையும்.
தங்களது வாழ்க்கையின் பிற்பகுதியில், தாங்கள் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, ஆனந்தமான வாழ்க்கை வாழ்வார்கள். அலைபாயும் (2 எண்) வாழ்க்கையானது இவர்களது திட்டமிட்ட உழைப்பால் இன்ப வாழ்வாக (1 எண் ) மாறி விடும். காரணம் சந்திரன் சூரியனுடன் சேர்ந்து மூன்றாக மாறுவதால், நல்ல பிற்கால இன்ப வாழ்க்கை உண்டு.