17-ஆம் தேதி பிறந்தவர்கள்

இவர்கள் மிகுந்த சோதனைகளைச் சந்திப்பவர்கள். சலிக்காமல் உழைக்கும் இயல்பினர். எப்படியும் இறுதியில் பெருமைமிகு வாழ்க்கையை அடைவார்கள். நுண்ணிய அறிவு படைத்த சாமர்த்தியசாலிகள். குற்றங்களை மன்னிக்கும் கருணை மனமும் உண்டு. ஆன்மிக வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும், அரசியலிலும் நிலையான இடத்தைப் பிடித்து விடுவார்கள். இவர்கள் வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும், தங்கள் உழைப்பினால் பெரும் செல்வத்தைச் சம்பாதிக்கும் யோகமும் உண்டு. பணம் சேர்ப்பதில் சமர்த்தர். துணிந்து எடுக்கும் சில முடிவுகள் தோல்வியும் அடையும். இருந்தாலும் அதை வெளியே தெரியாமல் வெற்றிக்கு மாற்றும் சாதுர்யம் உண்டு. இவர்களே பெருந் திட்டங்களைத் தீட்டி, அவற்றைச் செயல்படுத்துவார்கள். தங்களுக்கு வரும் தடைகளையும், சோதனைகளையும் துவம்சம் செய்யும் துணிவு படைத்தவர்கள்.