15-ம் தேதி பிறந்தவர்கள்

மற்ற மக்களை வசீகரிக்கும் தன்மை இயற்கையிலேயே உண்டு. பேச்சுத்திறமையும், கவர்ச்சியும் உண்டு. கலைகளில் தேர்ச்சியும், நகைச்சுவைப் பேச்சும் உண்டு. எதிரியை எடை போடுவதில் மிகவும் திறமையானவர்கள். ஆனால் எதிரிகளை எப்போதும் மறக்க மாட்டார்கள். பொறுமையுடன், காலம் பார்த்துப் பகையைத் தீர்த்துக் கொள்வார்கள். மனதிற்குள் கவலைகள் இருந்தாலும் அவற்றை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சமாளிப்பார்கள். நாடகம், சினிமா, டி.வி. போன்றவற்றில் ஈடுபடுவார்கள். நல்ல புகழும், அதிர்ஷ்டமும் தேடி வரும்.