14-ஆம் தேதி பிறந்தவர்கள்
இவர்கள் மிகுந்த அதிர்ஷ்டம் உடையவர்கள். பயணத்தில் சலிக்காத நாட்டம் இவர்களுக்கு இருக்கும். பலர் புகழ்பெற்ற வியாபாரிகளாக இருப்பார்கள். இருந்தாலும் இவர்களது வாழ்க்கையில் அடிக்கடி விபத்துகள், சரிவுகள் ஏற்படும். இறைவனின் அருளால் இவர்களுக்கு துன்பங்களைச் சமாளிப்பதற்கான சூழ்நிலையும், அறிவும் உருவாகும். காதல் விஷயங்களில் கவனமாக இல்லாவிட்டால், பின்பு வாழ்க்கையே கசந்துவிடும். மக்களைக் கவர்கின்ற சிறந்த எண் இது. எனவே எப்போதும் இவரைச் சூழ்ந்து 10 பேர் இருப்பார்கள். அரசியலிலும் இவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு!