12-ம் தேதி பிறந்தவர்கள்
வாழ்க்கையில் தனியாகப் போராடப் பிறந்தவர்கள். தாய், தந்தையின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். உறவினர்களால் பயன் இல்லை. பேச்சிலே இணையற்றவர்கள். அதிகாரமாகப் பேசி தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். இவர்களது பெற்றோரின் பொருளாதார நிலையும் பாதிக்கப்படலாம். மற்றவர்களுக்காகவே உழைப்பார்கள். படிப்பு, தொழில் ஆகியவற்றில் இவர்கள் சுயமாகவே போராடி முன்னேறி விடுவார்கள். வறுமையான இளமை வாழ்வைத் தவிர்க்க முடியாது! தங்கள் தகுதியை வளர்த்துக் கொண்டால் நீதிபதிகள், வக்கீல்கள், பேராசிரியர்கள் ஆகிய பெரும் பதவிகள் தேடிவரும்.