மகேந்திரப் பொருத்தம் - திருமணப் பொருத்தம்

திருமண வாழ்க்கையில் புத்திர விருத்தி மற்றும் புத்திரர்களால் வர்ம் செல்வம் ஆகியவற்றைக் கொடுக்க உதவும்
புத்திம விருத்தி தரும் பொருத்தம் இரு பெண்ணின் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் வரை எண்ணிய தொகை 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆவது எனில் மகேந்திர பொருத்தம் உண்டு எனலாம். மற்றவை பொருத்தமில்லை. இப்பொருத்தம் அவசியமே. ஆனால் முக்கியமானது அல்ல. இப்பொருத்தம் இல்லையெனில், ஜாதகங்களில் புத்திரஸ்தான பலனைக் கொண்டு ஜோதிடர் தீர்மானிப்பார். .
உதாரணம் : பெண் நட்சத்திரம் கார்த்திகை, ஆண் நட்சத்திரம் சதயம் என்றால் பெண் நட்சத்திரம் முதல் கார்த்திகை 1, ரோகிணி 2, மிருகசீரிஷம் 3 என்று எண்ண வேண்டும். ஆண் நட்சத்திரம் சதயம் 22 வது நட்சத்திரமாக வரும். எனவே மகேந்திரப் பொருத்தம் உண்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மகேந்திரப் பொருத்தம் - திருமணப் பொருத்தம், பொருத்தம், நட்சத்திரம், மகேந்திரப், ஜோதிடம், திருமணப், கார்த்திகை, சதயம், பெண், உண்டு, விருத்தி, இப்பொருத்தம்