தினப் பொருத்தம் - திருமணப் பொருத்தம்
ஒவ்வொரு நாளும் கணவன் மனைவிக்கு திருநாளாக அமைய உதவும்.
தினம் என்றால் நட்சத்திரம் எனப் பொருள். நாள் தோறும் சந்திரபகவான் தங்கும் இடம் அல்லது ஷேத்திரம். அதுவே நாள் ஷேத்திரம் இது மருவி நட்சத்திரம் என ஆகியது. எனவே இந்த தினப்பொருத்தம் முக்கியமான ஒன்று.
பெண் நட்சத்திரத்தை முதலாக கொண்டு ஆண் நட்சத்திரம் வரை எண்ண 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 17, 18, 20, 22, 24, 26, 27 வந்தால் தினபொருத்தம் உண்டு. வேறு எண் வந்தால் தினபொருத்தம் இல்லை.
உதாரணம் : பெண் நட்சத்திரம் கார்த்திகை, ஆண் நட்சத்திரம் சதயம் என்றால் பெண் நட்சத்திரம் முதல் கார்த்திகை 1, ரோகிணி 2, மிருகசீரிஷம் 3 என்று எண்ண வேண்டும். ஆண் நட்சத்திரம் சதயம் 22 வது நட்சத்திரமாக வரும். எனவே தினபொருத்தம் உண்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தினப் பொருத்தம் - திருமணப் பொருத்தம், நட்சத்திரம், பொருத்தம், தினபொருத்தம், தினப், ஜோதிடம், பெண், திருமணப், உண்டு, சதயம், கார்த்திகை, ஷேத்திரம், என்றால், நாள், எண்ண, வந்தால்